திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்
திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்
திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்
திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்
திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்
திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள்

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் திருக்கோணமலைப் பத்திரகாளி கோயிலில் பூசை, வழிபாடுகளுடன் சிறப்புடன் நடைபெற்றது. சிறப்பு பூசை வேதாகமாமணி பிரம்ம ஸ்ரீ மசோ. இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் வெள்ளிக் கிழமை டிசம்பர் 5ம் திகதி நடைபெற்றது.


திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் ஆலயங்களிலும், வீடுகளிலும் பயபக்தியுடன் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளின் மாண்பினை, அதன் உட்கருத்தை சிந்திப்போம்.
'முன்னொருகாலத்தில் தேவர்கள் சிவபிரானை வேண்டித் தவம் செய்து பல வகையான வரங்களைப் பெற்றனர். பின் ஆணவமல மமதையால் இறைவனை மதியாது மயக்குற்றனர். அப்பொழுது சிவபிரான் அவர்கள் முன்ஒரு கிழவனாகக் காட்சியளித்து .ஒரு தும்பை ஓர் இடத்தில் நட்டுவிட்டு இதையாராவது பிடுங்குங்கள் என்று கூறினார். ஓருவராலும் அதைப் பிடுங்க முடியவில்லை ஆணவ மமதை அடங்கிக் கிழவனைப் பார்த்தனர். அப்பொழுது அவர் சோதிவடிவாய் நின்றனர் அன்றைய தினம் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளாகும். இத்தினமே விளக்கீடு என்று கொண்டாடப்படுகிறது.'