நவராத்திரி எட்டாம் நாள்

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய நவராத்திரி விழாவில் இன்று புதன்கிழமை, ஒக்டோபர் முதலாம் திகதி கலைமகளுக்கு அந்தணப் பெருமக்கள் மந்திரம் ஓதி, பல்வகைத் தீப, தூபங்கள் காட்டி விசேட பூசை ஆற்றினர். அதனைத் தொடர்ந்து, பத்திர காளி அம்பாள், இலக்குமி தேவி, சரஸ்வதி தேவி ஆகிய முத்தேவியரும் உலாவந்து உள்ளம் உருகி வழிபட்டு நின்ற அடியார்களுக்கு அருள்பாலித்தனர்.