நவராத்திரி ஆறாம் நாள்

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய நவராத்திரி விழாவில் இலக்குமி பூசை மூன்றாம் நாளாம் இன்று திங்களன்று, செப்டம்பர் 29ம் திகதி, செவ்வனே நடைபெற்று, அந்தணர்கள் சூழ்ந்து நின்று ஆரத்தி காட்டினர். திருமகள் வீதிவலம் வந்தாள். கைகூப்பி நின்ற அடியார்க்கு அருளமுதம் அள்ளி அள்ளிச் சொரிந்தாள்.