நவராத்திரி நான்காம் நாள்

திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய நவராத்திரி விழாவில் இன்று, செப்டம்பர் 27ம் திகதியன்று, சனிக்கிழமை, இலக்குமி பூசை பயபக்தியுடன் நடைபெற்று, உள்ளம் ஈர்க்கும் அலங்காரத்துடன் செல்வமகள் வீதிவலம் வந்தாள். கைகூப்பி நின்ற அம்பாள் உபாசகர்களுக்கு வரம்பல நல்கினாள்.