நவராத்திரி இரண்டாம் நாள்

திருகோணமலை பத்திரகாளி கோயிலில் நவராத்திரி இரண்டாம் நாள் மாலை (செப்டம்பர் 25), துர்க்கை அம்பாளுக்கு விசேட தூப, தீப பூசை நடைபெற்றது. கண்கவர் சாத்துப்படி மிளிர, துர்க்கை அம்மன் அழகிய மயில் ஊர்தியில் அமர்ந்து வீதிவலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.