ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு


யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.


பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் ஸீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது சக்ரம் எனப்படும் ;ஸ்ரீ சக்ரபூர்ணமகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம.; இந்திரன்இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.


அது போல அன்னை ஜகன் மாதாஅம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.; இவவாலயத்தில் காணப்படுவது அதேபோன்ற மகாமேருவாகும்


அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர்.ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

1 :முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

2 : தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகின்p முதலான 16 தேவியர் காவல் புரி;கின்றனர்.

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேஸம்சேஷரபன சக்ரம் என்ற பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

4 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகிpன்றனர்.

7. முக்கோணங்களைக் கொண்ட ஸாவரோககர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

8. ஒரே முக்கோணம் ஸாவஸித்தப் பிரதாயக சக்கரம்என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.


9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ருபர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ருபுர சந்தரியாக இருந்த கொண்டு அருள் பாலிக்கின்றாள்.


இந்த அமைப்பைக்கொண்டஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர் ;போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்தமார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.


மக்கள் அன்பும் அறமும் நிரம்பப்பெறும் பொருட்டும், எங்கும் அமைதி, ஆனந்தம் செழிக்கும் பொருட்டும் திருக்N;காhணமலையில் வீற்றிருக்கும் பத்திரகாளி அம்மன் சன்னிதியில் ;பெருமுயற்சியுடன் இந்த மேருஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. வழிபட்டு அருள் பெறுக என்று ஆசீhவதிக்கி;றார் ஆதீனகர்த்தா ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள்.