கேதார கௌரி விரதம்

புரட்டாதி மாதம் விஜய தசமியன்று இவ்விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஜப்பசி மாத அமாவாசைத் திதியில் விரதம் நிறைவு பெறுகிறது. 

21 நாட்களுக்கு அனுட்டிக்கப்படும் இவ்விரதம் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கடந்த 200 வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இலங்கையின் பல இடங்களிலிருந்தும் இவ்விரதத்தை அனுட்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுவார்கள். அம்பிகையின அருட்பலத்தால் வருடா வருடம் இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொணடே வருகிறது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், அனைவரும் இவ்விரதத்தை அனுட்டிக்கலாம். அதனால், ஒவ்வொரு வருடமும் ஜயாயிரத்துக்கும் அதிகமானோர் இவ்வாலயத்தில் வந்திருந்து இவ்விரத்தை அனுட்டிப்பார்கள்.


பூசைப்பெட்டிகள் ஆலயத்துள் அடுக்கி வைக்கப்பட்டு அலங்காரபூசைகள் நடைபெறும். பூசையின் முடிவில் விரதகாரருக்கு பூசைப்பெட்டிகள் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படும். தனியாக விரத நூலை மாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களுமுண்டு. ஆலயத்தில் தங்கியிருந்து விரதம் ;அனுட்டிப்பவர்களுக்கு அடுத்த நாள் பாறனைப் பூசையும் செய்து அனுப்புவார்கள். விரத பலன் மக்களை ஆன்மீக வாழ்வுக்கு இட்டுச்செல்லும் புனித நிகழ்ச்சியாக அமைகிறது.