சிங்க வாகனம் கிடைத்த அற்புதம்

 

 

திருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள்!

இந்த சிங்கவாகனம் எழில் மிக்கது. கம்பீரத் தோற்றமுடையது. தென் இந்தியாவில் இருந்து இச்சிங்க வாகனம் கப்பலில் கடல் வழியாகக்  கொண்டுவரப்பட்டது.

 

இக்கப்பல் திருக்கோணமலை இயற்கைத் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டது. பின்னர் அக்கப்பல் புறப்பட்டவேளை, அது நகர மறுத்துவிட்டது எவ்வளவோ முயன்றும்  அது சாத்தியப்படாத போது, இந்த வாகனத்தை மாலுமிகள் இக்கோயிலுக்கு வழங்கி காளி வழிபாடு செய்தனா.; அதன் பின்னர் அம்மாலுமிகள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். நகர மறுத்த கப்பல் இயங்கிச் சென்றது.