எங்கள் பத்திரகாளி

பகலவனுக்கு வெப்பத்தையும் சந்திரனுக்குக் குளிரையும் தருபவள் அவள்!
மேகமெனக் கறுத்தவை அவள் கூந்தல்!
அடியார்கள் வேண்டுதலைச் செவி சாய்ப்பவை அவள் செவிகள்!
ஆறாம் பிறை அவள் நெற்றி!
கண்ணனின் போர்வில் அவள் புருவங்கள்!
கருநீல மலர், கலைமான் நோக்கு, அவள் விழி! 
உதிரத்தின் நிறத்தை பட்டென்று காட்டும் அவள்செவ்விதழ்!
அடியவர்கள் துன்ப மலைகளைச் சுமப்பவள் அவள் தோள்கள்!
தருமத்தைக் காப்பவை அவள் மென் கரங்கள்!
பாலாபிடடேகத்தில் ஒளி சிந்தி பக்தர்களைக் காப்பவை அவளிரு பாதங்கள்!
இதுவே அம்பாளின் அருட் தோற்றம்.

ஆலய தோற்றம்

மதுரையை சேர்ந்த அந்தணர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு அசரீரி கேட்டதைத் தொடர்ந்து திருக்கோணமலை வந்தார். மேலும் >>

 

மறக்கருணை

ஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். மேலும் >>

 

சிங்கவாகனம் கிடைத்த அற்புதம்

திருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள்! இந்த சிங்கவாகனம் எழில் மேலும் >>

 

மதனுடை நோன்றாள்

ஓர் அழகான பெண் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந்  மேலும் >>

தேரேரி வந்தனள் பத்திரகாளித்தாய்
திக்கெட்டும் அருள்மழை பொழிந்தனள்!


அருள்மிகு திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில் பத்தாம் தேர்த்திருவிழாவின் பொழுது புதனன்று அன்னை பத்திரகாளி அழகிய தேரேரி எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி அடியார்களுக்கு அருளினை வாரிவழங்கினாள்.

ஆணடியார்கள் அங்கப்பிரதட்சனம் ஆற்றியும், பெண்ணடியார்கள் அடியழித்தும், இன்னும் பலர் கற்பூரச்சட்டி ஏந்தியும் நேர்கடன் ஆற்றினர்.

தேர்வடம் பிடித்து
நேர்கடன் செய்வோம்
நினைப்பது தாராய்
ஆச்சிநீ காளி!
உன்கோயில் சூழ்ந்து
உருண்டுருண்டு வாரார்
கண்டிலையோ! கண்டிலையோ
ஆச்சிநீ காளி!

அன்னை சப்பரத்தில் எழுந்தருளி
சௌபாக்கியம் சொரிந்தாள்

ஓன்பதாம் திருவிழாவன்று திங்களிரவு பத்திரகாளி அம்பாள் சப்பற வாகனத்தில் வலம்வந்து கும்பிடும் அடியார்கட்கு சௌபாக்கியம் அருளினாள்.

மீனாட்சி கைபிடிக்க
ஆண்டியும் அரசனாவான்
பானை பிடித்த பாக்கியம்
ஆச்சிநீ காளி!
துன்பமலை கண்டு
துவளேன்! துணிவேன்
தைரிய சக்தி
ஆச்சிநீ காளி! 

குதிரை வாகனத்தில் உலாவந்தனள் காளி ஆச்சி   

 

அருள்மிகு பத்திரகாளி அன்னை வருடாந்த மகோற்சவ விழாவில்&nbsp ன்பதாம் நாள் தி;ங்களன்று இரவு குதிரை வாகனத்தில் உலாவந்தனள். அன்றைய வேட்டைத் திருவிழாவில் அடியார்களுக்கு அருள்மழை பொழிந்தாள்.  

பரிமாவில் நீவந்து 

ஆசையறுமின் என்பாய் 

கோணமலைத் தாயே 

ஆச்சிநீ காளி! 

சம்பந்தப் பாலகன் 

பால்கேட் டழுதிடப் 

பரிவு காட்டினாய் 

ஆச்சிநீ காளி!

சிங்க வாகனத்தில் உலாவந்தனள் காளி ஆச்சி


அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ உற்சவ ஏழாம் திருவிழாவன்று ஞாயிறு இரவு, காளி ஆச்சி தனக்குரிய சிங்கவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.

சிங்கத்தில் உலாவந்து
சீர்செய்வாள் காளி
சிங்கார வடிவினளே
ஆச்சிநீ காளி!
பாயும் மனமடக்க
மானில்நீ வாராய்
பாய்கலைப் பாவாய்
ஆச்சிநீ காளி!
தருமங் காக்க மென்கரம்
துன்பமஞ் சுமக்க மென்தோள்
நமைக்காக்கப் பாதம்
ஆச்சிநீ காளி!

காளி ஆச்சி கைலாச வாகனத்தில் உலாவந்தனள் 

கருணைமழை பொழிந்தனள்

பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாளிரவு சனிக்கிழமை காளி ஆச்சி கைலாசவாகனத்தில் உலாவந்து அடியார்களுக்கு கருணைமழை பொழிந்தாள்.பக்தர்கள் நேர்கடன் நிறைவேற்றினர்.

கௌரி நோன்பு காக்க
வாய்திறவாக் கணவன்
வாய்திறந்தான் அம்மே
ஆச்சிநீ காளி!
உன்கோயில் சூழ்ந்து
உருண்டுருண்டு வாரார்
கண்டிலையோ! கண்டிலையோ!
ஆச்சிநீ காளி!
அங்கமெலாம் நோக
உருண்டுருண்டு வாரார்
அன்னார்க் கபயம்
ஆச்சிநீ காளி!

 

மஞ்சத்தில் எழுந்தருளி மங்களம் தாராய்


பத்திரகாளி அம்பாள் கோயில் வருடாந்தத் திருவிழாக் காலத்தில் 5ம் நாளிரவு, வெள்ளியன்று காளித்தாய் மஞ்சத்தில் வலம்வந்து அம்பாள் அடியார்களுக்கு வேண்டும் வரங்கள் பல வாரி வழங்கினாள்.

நோன்பு காக்கும்அடியார்கள் அம்பாள் பாடல்களைப் பயபக்தியுடன் பாடியேத்தினர். அம்பாள் அடியார்கள் – ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர், சிறுவர்கள் - அங்கப்பிரதட்சனம் செய்தும், அடியழித்தும், காவடி தூக்கியும் நேர்கடன் செலுத்தினர்.

சந்திரன்ஐயா சாத்துப்படி கண்டு
மனமது லயிக்கும்
ஆச்சிநீ காளி!
வேதியர் காட்டும் தீபங் கண்டு
உள்ளம் உருகும்
ஆச்சிநீ காளி!
ஐயர் ஆற்றும் அர்ச்சனை கேட்டு
ஆறுதல் அடைவோம்
ஆச்சிநீ காளி!

அன்ன வாகனத்தில் எழுந்தருளினாள் பத்திரகாளி அம்பாள்

 


திருகோணமலை பத்திரகாளி அப்பாள் ஆலய 2019 ம் வருடாந்தத் திருவிழாவின் நாலாம் நாள் வியாழனிரவு எங்கள் அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினாள். அருள்பாளித்தாள். அடியார்கள் பத்திரகாளித் தாயை ஏத்தியேத்தித் தொழுதனர்.

 

மீன்கயல் பொறித்தநம் 
திருக்கோண மலையுறை 
மீனாட்சிஇ காமாட்சி 
ஆச்சிநீ காளி!
நின்கோபுர தரிசனம் 
கோடி புண்ணியம் 
கோணமலைத் தாயே
ஆச்சிநீ காளி!
நேர்ந்திடுவார் வேண்டுதலை 
நிறைசெய்வாள் காளி! 
ஈர்த்திடுவாய் நெஞ்சை 
ஆச்சிநீ காளி!

 

சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாள் அம்பாள்

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோயில் 2019 வருடாந்தத் திருவிழாவின் மூன்றாம் நாளிரவு, புதனன்று அம்பாள் சர்ப்ப வாகனத்தில் வீதி வலம்வந்து நாக தோஷம்இ ஏனைய தோஷம் தீர்த்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.

விரதம் காக்கும் அடியார்கள் அம்பாள் பாடல்களைப் பயபக்தியுடன் பாடியேத்தினர். அம்பாள் அடியார்கள்- ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்,சிறுவர்கள் - அங்கப்பிரதட்சனம் செய்தும், அடியழித்தும் காவடி தூக்கியும் நேர்கடன் செலுத்தினர்.

ராகுதோஷம் நீங்க
நாகத்தில் நீவாராய்
கோணமலைத் தாயே
ஆச்சிநீ காளி!
ஊரவர் துயர்களைய
அற்புதங்கள் செய்திடுவாள்
ஈரமுடை நெஞ்சத்தாள்
ஆச்சிநீ காளி!

இவ்வாறு பாடி அடியார்கள் அம்பாளை ஏத்தித் தொழுதனர்.

மகரவாகனத்தில் வீதிவலம் வந்தாள் பத்திரகாளித் தாய்

 

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்தத் திருவிழாவின் (2019) இரண்டாம் நாளிரவு செவ்வாயன்று மார்ச்மாதம் 12ம் திகதி பத்திரகாளி அம்பாள் மகர வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளpனாள்.

நோன்பு காக்கும் பக்தர்கள் காளிஅம்பாள் பாடல்களைப் பயபக்தியுடன் பாடி;த் துதித்தனர். அம்பாள் அடியார்கள்- ஆண்கள்இ பெண்கள்இ இளைஞர்கள்இ முதியோர்இ சிறுவர்கள் - அங்கப்பிரதட்சனம் செய்தும்இ அடியழித்தும்இ காவடி தூக்கியும் நேர்கடன் செலுத்தினர்.

கோணமலைத் திருத்தலம்
காத்திடுவாள் காளி!
தொழுவார்க்குத் தீங்கில்லை
ஆச்சிநீ காளி!
கோணமலை ஊராihக்
காவலசெய் காளி!
வேப்பிலை ஏந்திடும்
ஆச்சிநீ காளி!
கோணமலை ஊராரைக்
காத்திடுவாள் காளி!
தொழுவார்க்குத் தீங்கில்லை
ஆச்சிநீ காளி!

இவ்வாறு பாடி அடியார்கள் அம்பாளை ஏத்தித் தொழுதனர்.

பத்திரகாளி அம்பாள் கோயில் முதல்நாள் திருவிழா

 

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் கோயில் கொடியேற்றம் திங்கள் காலை நோன்பு காக்கும் பல நூற்றுக் கணக்காண பக்தர்களும், பக்தைகளும் பயபக்தியுடன் பங்குபெற இடம்பெற்றது.

அன்று மாலை இடம்பெற்ற திருவிழாவில் அம்பாள் காராம்பசு வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.

 

திருகோணமலை
பத்திரகாளி அம்பாள் கோயில் கொடியேற்றம் 2019

 

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் கோயில் கொடியேற்றம் திங்கள் காலை நோன்பு காக்கும் பல நூற்றுக் கணக்காண பக்தர்களும், பக்தைகளும் பயபக்தியுடன் பங்குபெற இடம்பெற்றது.

பத்திரகாளி ஆதீனகர்த்தா வேதாகமாமணி ரவிச்சந்திரக் குருக்கள் அவர்களின் வழிகாட்டலின்கீழ், அந்தணர்கள் வேதமோத, மேளதாள ஒலி முழங்க, அடியார்கள் 'அம்பாளுக்கு அரோகரா' என்று குரலேத்திக் கைதொழ ஆலயக் கொடி ரம்மியமாக ஏறியது கண்டு அடியார்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

ஆண்அடியார்கள் அங்கப்பிரதட்சணை ஆற்றியும், மகளிர் அடியளித்தும் நேர்கடன் நிறைவேற்றினர். அம்பாள் வீதிவலம் வந்து அருள்பாலித்தாள்.

கொடியேற்ற நன்னாளில் கும்பிடும் நமக்குக்
கோடி செய்தாய் ஆச்சிநீ காளி!
கொடியேறும் வேளை உனைக்கண்டு கண்டு
மெய்சிலிர்க்கும் ஆச்சிநீ காளி!
கொடியேற்ற நாளில் வேண்ட வேண்ட
அத்தனையும் தந்தாய் ஆச்சிநீ காளி!